டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட
அறிக்கை:
😝 அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிவுகள் மூலம் நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள்.
டெலிகிராமில் ஒளிபரப்பப்படும் பதிதடங்கள் மாதந்தோறும் நூறாயிரம் கோடி பார்வைகளுக்கு உள்ளாகிறது. தற்போது, இந்தப் பார்வைகளில் 10% மட்டுமே டெலிகிராம்
விளம்பரங்கள் மூலம் பணமாக்கப்படுகின்றன - இது
தனிமறைவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட விளம்பரக் கருவியாகும்.
மார்ச் மாதத்தில், டெலிகிராம் விளம்பர தளம் கிட்டத்தட்ட நூறு புதிய நாடுகளில் உள்ள அனைத்து விளம்பரதாரர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த நாடுகளில் உள்ள பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிதடங்களில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் டெலிகிராம் பெறும் வருவாயில் 50% பெறத் தொடங்குவார்கள்.
விளம்பரக் கட்டணங்கள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் தனித்துவமான இடான் தரவுத்தொடரைப் பயன்படுத்துவோம்.
துணுக்கில் டெலிகிராம் பயனர்பெயர்களுடன் எங்களின் அணுகுமுறையைப் போலவே, நாங்கள் விளம்பரங்களை விற்று வருவாயை இடான் நாணயம் மூலம் பதிதட உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இது ஒரு நற்பண்புமிக்க வட்டத்தை உருவாக்கும் மேலும் இதில் பதிவிடுவோர்கள் தங்கள் இடான் நாணயங்களைப் பணமாக்க முடியும் - அல்லது அவர்களின் பதிதடங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றை மீண்டும் முதலீடு செய்யலாம்.
🤑