View in Telegram
ஐயமும் தீர்வும்: அரட்டை உரிமையாளரின் தனித்துவ உரிமைகள் அனைத்து சாத்தியமான அனுமதிகளையும் பெற்ற மற்ற நிர்வாகிகளை விட ஒரு குழு அல்லது பதிதடத்தின் உரிமையாளருக்கு அதிக உரிமைகள் உள்ளன. உரிமையாளரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாத செயல்களின் பட்டியல்: பொதுவான செயல்கள்: • குழு அல்லது பதிதட வகையைப் பொது அல்லது தனிப்பட்டதாக மாற்றுதல் • பொதுக் குழு அல்லது பதிதடத்திற்கான பயனர்பெயரை அமைத்தல். • "உள்ளடக்கச் சேமிப்பை" இயக்க அல்லது முடக்க. • தலைப்புகளை இயக்க (உரையாடும் மன்றமாக மாற்றுதல்) அல்லது முடக்க. • பொதுக் குழுவில் "ஒப்புதல் முறை" தெரிவை இயக்க அல்லது முடக்க. • அரட்டையிலிருந்து வெளியேறி மீண்டும் இணைந்த பிறகு உரிமையாளரின் உரிமைகளைப் பேணுதல். • குழு அல்லது பதிதடத்தை அழித்தல். குழு அல்லது பதிதடத்தில் 1,000 பேருக்கு மேல் இருந்தால், அதை அழிக்க டெலிகிராமைத் தொடர்பு கொள்ள வேண்டும். • குழுக்களுக்குத் தகவல்களை பொதுப் பதிதடங்களாக அனுப்புதல் (மிகைப்பு அம்சம்). நிர்வாக மேலாண்மை: • நிர்வாகிகளைப் பதவி உயர்த்துதல், தரமிறக்குதல் அல்லது அவர்களின் உரிமைகளை மாற்றுதல். வழக்கமான நிர்வாகிகள் தாங்கள் பதவி உயர்வு அளித்த நிர்வாகிகள் அல்லது துணை நிர்வாகிகளால் பதவி உயர்வு பெற்ற நிர்வாகிகளின் அனுமதிகளை மட்டுமே மாற்ற முடியும். • பிற நிர்வாகிகளால் உருவாக்கப்பட்ட அழைதொடுப்புகளைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல். • உடமை உரிமையை மாற்றுதல் (இரண்டு-படி சரிபார்ப்பு இயக்கத்தில் இருந்தால்). #ஐயமᕃமᣞதᖘரᣞவᕃமᣞ
Love Center - Dating, Friends & Matches, NY, LA, Dubai, Global
Love Center - Dating, Friends & Matches, NY, LA, Dubai, Global
Find friends or serious relationships easily